Friday, May 16, 2008

என்னவள் உன் மௌனத்துடன்


எழுதியவர் சாந்தன்

-------------------------------------------------


உன் கவிதைகள் ஏனோ எனக்கு
மிகவும் பிடித்து போயின
என்னவள் உன் மௌனத்துடன்
அவை ஒன்றித்து போனதனால்

எல்லோரையும் பார்த்து புன்னகை உதிhக்கும் நீ
ஏன் என்னை மட்டும்
உன் மௌனபார்வையால்
தண்டித்து விடுகின்றாய்

உன் மௌனமும் இன்று
எனை கொல்லும்
மரணகருவிகளில் ஒன்றானது
நீ பார்க்கும் விலகலில்

உறவினர்க்கு ஏதேதோ கொடுக்கும் நீ
எனக்கு ஒரு புன்னகை என்றாலும்
உதிர்க்க கூடாதா?- அன்பே
உன் மௌனத்தை விலக்கி

உன் அசைவு ஓவியம்
அது யாருக்குமல்ல
உனை ரசிக்கும் ரசிகன்
எனக்கு மட்டும்தான்

நீ விலக்கி விடக்கூடாது
என்னை மட்டுமல்ல
உன்னுடன் சேர்த்து
நம் நினைவுகளையும்-தான்

நீ மௌனமான நதியாய்
என்னுள் பாய்கின்றாய்
யாரும் அறியவில்லை
நமை தவிர………….

உன் அசைவுகளில் நான்
என் அசைவுகளில் - நீ
மௌனித்து போய் இருக்கிறோம்
நம் மௌனக்காதலால்

தண்டித்து விடாதே –நீ
உன் கதல் வலையில் -இருந்து
எனை விடுவித்து –அது
நீ இடும் மரணதண்டனை- எனக்கு


நான் பார்க்கும் போதெல்லாம்
நீ மௌனமாக இருக்கின்றாய்
என் மேல் நீ கொண்டுள்ள—உன்
மௌன கதலை வெளிப்படுத்தவா?



நீ எனை விட்டுவிலகும் பொழுது
என் உலகம் இருண்டு விடுகின்றது
நீ என்னை நெருங்கும் பொழுதெல்லாம்
என் வாழ்வு விரிந்து போகின்றது
---------------------------------------------

No comments: